ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் படைக்காத இந்த சாதனையை செய்யவே எனக்கு ஆசை – ஸ்ரேயாஸ் ஐயர் விருப்பம்

Iyer

இந்த வருட ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ளது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த தொடர் அமைய உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.

csk vs dc

அதனைத் தொடர்ந்து இரண்டாவது லீக் ஆட்டமாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வரும் நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் இடம் ஐபிஎல்லில் முறியடிக்க விரும்பும் சாதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து பதிலளித்த ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெல்லவேண்டும் என்ற சாதனையை படைக்க விரும்புவதாக தெரிவித்தார். அதாவது ஒரு சீசனில் டெல்லி அணி பங்கேற்கும் 14 போட்டிகளையும் தான் வெல்ல வேண்டும் என்று அவர் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Iyer

2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை பனிரெண்டு (12) சீசன்களாக எந்த ஒரு கேப்டனும் தொடர்ந்து ஒரு சீசனில் அனைத்து போட்டிகளையும் அப்படி வென்றதில்லை. எனவே இந்த விசித்திரமான சாதனைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஆசைப்பட்டு இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Iyer

மேலும் டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கம்பீரின் திடீர் பதவி விலகலுக்கு பிறகு கேப்டனான ஐயர் தனது அணியை இளம் வீரர்களை வைத்து சிறப்பாகவே வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.