தோனியை அப்படியே கண் முன்னே நிறுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் வீடியோ

Iyer

இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடர்பான சையத் முஷ்டக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகளும் மற்ற அணிகளுடன் மோதி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணியின் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் அடித்த ஒரு சிக்சர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி தோனி ஹெளிகாப்டர் ஷாட்டை அடித்தது போன்று இவரும் அடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இதற்கு முன் சில வீரர்கள் நாம் பார்த்த வகையில் தற்போது ஐயர் அடித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.