ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் ரோஹித்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – அடிக்கவுள்ள ஜாக்பாட்

Rohit and Shreyas
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு ட்விஸ்ட் மற்றும் டர்ன்ஸ் ஆகியவை நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெளியான 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது டி20 போட்டிகளில் கம்பேக் கொடுத்த சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது ஆச்சரியமான ஒரு விடயமாக பார்க்கப்பட்டது. அதோடு சூரியகுமார் யாதவுக்கு அடுத்து சுப்மன் கில்லே அடுத்த டி20 கேப்டனாகவும் மாறுவார் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.

பதவி விலகும் ரோஹித் சர்மா : புதிய கேப்டனாகும் ஷ்ரேயாஸ் ஐயர்

இந்நிலையில் டி20 போட்டிகளை தாண்டி ஒருநாள் போட்டியிலும் சுப்மன் கில் தான் ரோகித் சர்மாவிற்கு அடுத்ததாக கேப்டனாக மாறுவார் என்று பேசப்பட்ட வேளையில் தற்போது ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக புதிய ஒருநாள் கேப்டனாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அடுத்த 2027-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாட விரும்பினாலும் அப்போது அவர் 40 வயதை எட்டி விடுவார் என்பதனால் அவரை அணியில் வைத்திருக்கலாமா? வேண்டாமா? என்கிற பேச்சு இருந்து வருகிறது.

இவ்வேளையில் கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் அவர் துவக்க வீரராக அந்த தொடரில் விளையாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதினால் அவருக்கு பதிலாக சுப்மன் கில்லே புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவருக்கு முன்னதாக சமீப காலமாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயரை புதிய கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்புகிறது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை நான்காவது இடத்தில் களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் ஏற்கனவே கேப்டனாக உள்ளூர் தொடர்களிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : தகுதியற்ற ஹர்ஷித் ராணாவை விட.. அந்த 2 நல்ல பவுலர்கள் குறைஞ்சவங்களா? ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

எனவே அவரது கேப்டன்சி மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணியின் நிர்வாகம் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக அவரை கொண்டு வர விரும்புகிறது. அதேபோன்று ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியில் சுப்மன் கில்லே தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement