தகுதியற்ற ஹர்ஷித் ராணாவை விட.. அந்த 2 நல்ல பவுலர்கள் குறைஞ்சவங்களா? ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

Aakash Chopra 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது பெரிய விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. அதே போல் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு ஜெய்ஸ்வால் கழற்றி விடப்பட்டதும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. அது போக வேகப்பந்து வீச்சுத் துறையில் ஹர்ஷித் ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கௌதம் கம்பீரின் அரசியல் என்று ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.

ஏனெனில் 2024 ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் வழி காட்டுதலில் அவர் ஸ்ரேயாஸ் தலைமையில் கொல்கத்தா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதற்கு மேல் வாய்ப்பு பெறாத அவர் கடந்த ஐபிஎல் ஐபிஎல் தொடரில் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் சுமாராகவே பவுலிங் செய்தார்.

- Advertisement -

தகுதியற்ற ராணா:

2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினார்கள். இந்நிலையில் ஆசியக் கோப்பை அணியில் தேர்வாக தகுதியற்ற ராணாவுக்கு பதில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய முகமது சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்ஷித் ராணா தேர்வு பற்றி விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் சிவம் துபேவுக்கு பதிலாக சப்ஸ்டியூட் வீரராக அறிமுகமான அவர் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் அந்தப் போட்டிக்கு முன்பும் பின்பும் அவருடைய செயல்பாடுகள் என்ன? கடந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பவுலிங் சுமாராக இருந்தது”

- Advertisement -

தகுதியான சிராஜ், கிருஷ்ணா:

“அவருடைய நம்பர்கள் சராசரியாக இருந்தது. அதனால் அவர் இந்த அணியில் இடம் பிடிப்பதற்கு வலுவான தகுதியைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. உண்மையில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்காது. ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுக்கும் ஒரு போட்டியில் வேண்டுமானால் அவர் விளையாடக்கூடும். அந்த வகையில் பெரும்பாலான போட்டிகளில் ராணா பெஞ்சில் அமர்ந்திருந்தால் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்று நீங்கள் சொல்வீர்கள்”

இதையும் படிங்க: பிரசித் கிருஷ்ணாவை தாண்டி ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இடம்பிடிக்க இதுதான் காரணமாம் – விவரம் இதோ

“இருப்பினும் சமீபத்திய புள்ளிவிவரங்களை பார்க்கும் போது நீங்கள் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அல்லது இங்கிலாந்தில் அசத்திய முகமது சிராஜுக்கு டி20 அணியில் பரிசளித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் இந்த இந்திய அணி நிர்வாகம் ஹர்ஷித் ராணாவை நோக்கி நகர்ந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement