ஒரு போட்டியில் கூட விளையாடலானாலும் சம்பளத்தொகை 7 கோடியையும் பெறவுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் – காரணம் இதுதான்

Iyer

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது பீல்டிங் செய்து இடது பக்க தோள்பட்டையில் காயமடைந்த இந்திய அணியின் முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் அந்த தொடரில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்த போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ள அவர் தற்போது காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

Iyer

அதனால் செப்டம்பர் மாதம் தான் அவரால் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க முடியும். இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த போட்டிகளிலும் இருந்தும் அவர் வெளியேறியுள்ளார். இருப்பினும் அவருக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து கிடைக்கும் சம்பளமான ஏழுகோடி முழுவதுமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் இப்படி முழு சம்பளத்தையும் பெறுவதற்கான காரணம் என்ன என்று பிசிசிஐ தெரிவிக்கையில் பிசிசிஐ ஒரு விதிமுறைப்படி 2011ஆம் ஆண்டிலிருந்து பிசிசிஐ காண்ட்ராக்டில் இருக்கும் வீரர்கள் காயமடைந்தாலோ அல்லது ஆக்சிடென்ட் காரணமாகவோ ஒரு தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றால் அவர்கள் பிசிசிஐ இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் முழுவதுமாக சம்பளத்தை பெற முடியும்.

Iyer-1

அதை சுட்டிக்காட்டி தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க வில்லை என்றாலும் பிசிசிஐயின் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் அவர் முழு சம்பளத் தொகை 7 கோடியே பெற உள்ளார். இதுவரை 79 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2200 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த ஆண்டு டெல்லி அணி இறுதிப் போட்டி வரை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் டெல்லி அணி சார்பாக இரண்டாவது இடத்தை அவர் பெற்றிருந்தார்.

- Advertisement -

iyer

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஆண்டு தொடரில் 519 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் இந்த தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 23 வயதான ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..