- Advertisement -
ஐ.பி.எல்

ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நாங்க முன்னேற காரணம் அவங்கதான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக திரிப்பாதி 55 ரன்களையும், கிளாசன் 32 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

முக்கியமான இந்த போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் இங்கு நிற்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இன்றைய நாளில் எங்களது அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக மைதானத்தின் தன்மையை பயன்படுத்திக் கொண்ட எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

இதையும் படிங்க : 11 நாளாச்சு.. எலிமினேட்டரில் ராஜஸ்தானை ஒன்ஃசைடா ஆர்சிபி தட்டி தூக்கிட்டு போகப் போறாங்க.. கவாஸ்கர் கணிப்பு

அதோடு எங்கள் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான திறமை உடையவர்கள் என்பதனால் வித்தியாசமான பவுலிங் லைன் அப் எங்களிடம் இருக்கிறது. நிச்சயம் இறுதி போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -