எங்கள் அணியின் தொடர் வெற்றிகளுக்கு இதுவே காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 23 வது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

dcvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக 24 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் 5 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 45 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 39 ரன்களும் குவித்தனர். அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே அடித்தது.

ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ராகுல் திவாதியா 38 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 34 ரன்களை குவித்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

ashwin

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இன்று இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. முதலில் நாங்கள் பேட்டிங் செய்து முடித்ததும் இந்த இலக்கு போதுமானது இல்லை என்று தான் நினைத்தேன்.

- Advertisement -

ஆனாலும் மைதானத்தில் பந்து நின்று வந்ததால் அது பவுலர்களுக்கு கைகொடுத்தது. மேலும் பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான திட்டங்களை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். நாங்கள் டாஸில் வெற்றிபெற்று இருந்தாலும் முதலில் பந்து வீச தான் தேர்வு செய்திருப்போம். ஏனெனில் இந்த போட்டியில் டியூ பேக்டர் ஒரு முக்கிய திருப்பத்தை கொடுக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இறுதியில் போட்டி எங்களுக்கு சாதகமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

dc

எங்கள் அணி சரியான கலவையில் உள்ளதால் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று வருகிறோம். எங்கள் அணி வீரர்கள் தங்களது பலவீனங்களையும். பலங்களையும் பகிர்ந்துகொண்டு விளையாடுவதால் இந்த சிறப்பான வெற்றி கிடைக்கிறது. எங்களது வீரர்கள் நடந்து கொள்ளும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வெற்றியை அப்படியே தொடர விரும்புகிறோம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement