எங்களிடம் உள்ள இந்த ஒரு நல்ல விடயமே எங்களது தொடர் வெற்றிக்கு காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

dcvsrcb

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 26 பந்துகளில் 53 ரன்களையும், ப்ரித்வி ஷா 42 ரன்களையும், பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் கோலி 43 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் தேர்வானார்.

Stonis

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : பிரஷர் சூழ்நிலைகளில் ஆட்டத்தை எடுத்துச் செல்வது முக்கியமானது. அந்த வகையில் நாங்கள் முன்னேற்றத்தை கண்டுள்ளோம் என நினைக்கிறேன். மேலும் எங்களது அணியுடைய வியூகம் என்னவெனில் பயமற்ற ஆட்டத்தை முழு சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். எங்கள் அணியில் நல்ல இளம் வீரர்கள் இருக்கின்றனர். எனவே எங்களுடைய திறமையையும் திறனையும் இத்தொடரில் வெளிப்படுத்துகிறோம்.

dc

இதுவரை நடந்த போட்டிகளில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளோம். இந்த வெற்றியை அப்படியே தொடர விரும்புகிறோம். மேலும் இந்த தொடர் முழுவதும் எங்களது வீரர்கள் கடினமாக உழைத்து நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை எங்களை சிறப்பாக விளையாட வைக்கிறது. இந்த வெற்றி சிறப்பானது என்று ஸ்ரேயாஸ் அய்யர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement