சூப்பர் ஓவரை ரபாடா சிறப்பாக வீசினார். இருந்தாலும் எங்களின் வெற்றிக்கு இவரே காரணம் – ஐயர் பாராட்டு

Iyer
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 53 ரன்கள் குவித்தார்.

dc vs kxip

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்கள் அடித்து போட்டி “டை” ஆனது. அதிகபட்சமாக துவக்க வீரர் மயங்க் அகர்வால் 89 ரன்களை குவித்தார். சூப்பர் ஓவர் முடிவின் மூலம் டெல்லி அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வெற்றி குறித்து சில சர்ச்சையும் இருந்துவருகின்றன. இந்நிலையில் போட்டி முடிந்து இந்த வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் :

Rabada

இந்த போட்டி மிகவும் த்ரில்லாக வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இடத்தில் திரும்பியது. முக்கியமான சூப்பர் ஓவரில் ரபாடா சிறப்பாக பந்துவீசினார். டி20 போட்டிகளின் சூப்பர் ஓவரை பொறுத்தவரையில் ரபாடா வெற்றிக்கான வீரன் அவரது சூப்பர் ஓவர் எங்களுக்கு வெற்றி வெற்றிக்கான வழி வகுத்தது.

Stoinis-2

இருப்பினும் இந்த போட்டியின் ஆட்டத்தை மாற்றியது மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மட்டுமே. டாப் ஆர்டரில் அடுத்தடுத்து எங்களது விக்கெட்டுகளை நாங்கள் இழக்க நானும் பண்டும் சிறப்பாக விளையாடினோம். அதன்பிறகு இறுதியில் ஒரே ஓவரில் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ஸ்டாய்னிஸ் இந்த போட்டியை மாற்றிவிட்டார் அவரின் ஆட்டமே இந்த வெற்றிக்கு காரணம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement