இவர் இருக்கும் வரை எங்களது வெற்றி உறுதி என்றே நினைத்தேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

Iyer

- Advertisement -

அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 58 ரன்களும், ராயுடு 45 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

58 பந்துகளைச் சந்தித்த ஷிகார் தவான் 101 ரன்களுடனும், 5 பந்துகளை சந்தித்த அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

Dhawan

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த டெல்லி அணியின் கேப்டன் அய்யர் கூறுகையில் : நான் இறுதி கட்டத்தில் மிகவும் படபடப்புடன் இருந்தேன். ஏனெனில் கடைசி ஓவரில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி சொல்ல முடியாது. இருப்பினும் தவான் கடைசி வரை நின்றால் போட்டியில் வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன்.

ஆனால் அக்ஷர் பட்டேல் அருமையாக பேட்டிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. முதல் நாள் கேம்ப்பிலிருந்து எங்கள் அணியில் நல்ல ஒற்றுமை உள்ளது. எங்களுடைய பலம், பலவீனம் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement