பேட்டிங்கை குறைகூற மாட்டேன். தோல்விக்கு இதுவே காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்

iyar
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Iyer

- Advertisement -

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த மைதானத்தில் விக்கெட் விழுந்த பிறகு புதிதாக இறங்கும் வீரருக்கு பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. பொதுவாக நான் ஸ்பின் பவுலர்களிடம் சிரமப்படுவதில்லை. ஆனால், இந்த மைதானத்தில் ஸ்பின் பவுலிங்கில் சிரமப்பட்டேன். மேலும், எங்கள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான பண்ட் இந்த போட்டியில் கஷ்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

dc

மைதானம் வேகத்தில் சற்று குறைவாக இருந்தது. அதுவே தோல்விக்கு முக்கியகாரணமாக அமைந்தது. எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தனர். தோல்விக்கு மைதானத்தின் கடின தன்மையே காரணம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Advertisement