ஈஸியா ஜெயிச்சாலும் இந்த மேட்ச்ல இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது – ஐயர் பேட்டி

Iyer-1
- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

IndvsNz

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் குவித்தனர். அதன்பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ரோஹித் 7 ரன்கள், ராகுல் 56 ரன்கள் மற்றும் கோலி 45 ரன்கள் குவித்தாலும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 29 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் என 58 ரன்கள் குவித்தார். மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் குவிக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த வெற்றி ஒரு பிரமாதமான வெற்றியாகும். அதுவும் வெளிநாடுகளில் போட்டியை நாட் அவுட்டுடன் முடித்ததும் சிறப்பான ஒன்றாகும். நாங்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பான பார்ட்னர்ஷிப் தொடர்ந்து அமைத்தோம்.

Iyer-1

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை வெற்றிக்கான இலக்கை எங்களால் விரட்ட முடியும் என்று நினைத்தோம். ஏனெனில் இது ஒரு சிறிய மைதானம் இதேபோன்ற சப்போர்ட் மீதி இருக்கும் போட்டிகளில் எதிர்பார்க்கிறோம் என்றும் அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல ஆவலாக இருக்கிறோம் என்றும் ஐயர் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement