சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு இது மட்டுமே காரணம். நாங்க தப்பு கணக்கு போட்டுட்டோம் – ஐயர் வருத்தம்

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 வது லீக் போட்டி நேற்று டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

bairstow

துவக்க வீரர்களான வார்னர் 45 ரன்களும், பேர்ஸ்டோ 53 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கம் அளித்தனர். அதன்பிறகு மனிஷ் பாண்டே வழக்கம்போல் 3 ரன்களில் ஏமாற்ற இந்த போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட வில்லியம்சன் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ரன் குவிப்புக்கு காரணமாக திகழ்ந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் என்ற நல்ல ரன்களை குவித்தது.

- Advertisement -

அதன்பிறகு 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பாக தவான் 34 ரன்களும், ரிஷப் பண்ட் 28 ரன்களும் அடித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக ரசித்கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

srh

இந்நிலையில் இந்தப் போட்டியில் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : 162 ரன்களில் அவர்களை கட்டுப்படுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்த மைதானத்தில் இது சேசிங் செய்ய போதுமான ரன்களாக இருக்கும் என நினைத்தோம். மேலும் இந்த மைதானம் எங்களுக்கு முதல் போட்டி என்பதால் எப்படி ஆடுகளத்தின் தன்மை இருக்கும் செயல்படும் என்பதில் எங்களுக்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லை.

- Advertisement -

மூன்று துறைகளிலும் அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். இரண்டாவது இன்னிங்சில் போது மைதானம் செயல்பட்ட விதம் எங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்யும் போது பந்து பேட்டுக்கு வரவில்லை. டியூ வந்ததால் இதுபோன்று மைதானத்தின் தன்மை மாறி இருக்கலாம். இந்த போட்டியில் நாங்கள் செய்ய நினைத்ததை தவறிவிட்டோம்.

Rashid

இந்த போட்டியில் இருந்து மைதானத்தில் சூழ்நிலை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு நிறைய கற்றுக் கொண்டோம். இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் மிகப்பெரியது எனவே இரண்டு ரன்களாக ஓடி ஓடி எடுத்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று கருதினோம். ஆனால் அது ஒர்க்கவுட் ஆகவில்லை அடுத்த போட்டியில் இருந்து இந்த தவறுகளை திருத்தி வெற்றிக்கு திரும்புவோம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Advertisement