இப்படி நடந்தால் நாங்க எப்படி ஜெயிப்போம். மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

Iyer

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsDC

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும், சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்களையும், ரஹானே 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக ரசித் கான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக விருத்திமான் சஹா தேர்வானார்.

Saha 2

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி எங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய தோல்வியாகும். இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எங்களுக்கு மீதமுள்ள நிலையில் இந்தத் தோல்வி எங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் நாங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறோம். எங்கள் அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடி இருக்கின்றனர். இந்த தோல்வியை எங்களது வேகத்தை குறைத்து விடாது. இருப்பினும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது இந்த போட்டியில் பவர் பிளேயிலேயே நாங்கள் தோற்றுவிட்டோம்.

Saha 1

ஏனெனில் முதல் 6 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக் கொடுப்பது போட்டியில் பெரிய திருப்பத்தை அளித்துவிடும். இருப்பினும் அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் இந்தத் தோல்வியிலிருந்து பாடங்களை கற்று எந்த இடத்தில் குறை உள்ளதோ அதனை சரிசெய்து நாங்கள் திரும்புவோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.