இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40-ஆவது லீக் போட்டியானது நேற்று நியூ சண்டிகார் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 59 ரன்களையும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 62 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது :
19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக டோனவன் பெரேரா 52 ரன்களையும், ஜெய்ஸ்வால் 51 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது :
இந்த ஆட்டத்தில் நாங்கள் அடித்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தோம். ஆனால் ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் எங்களது பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியில் பந்துவீச்சில் நாங்கள் சரியாக எங்களது திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் இந்த போட்டியில் வைத்திருந்த திட்டங்களை ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் மிகச் சரியாக கையாண்டு ரன்களை குவித்து விட்டனர்.
இதையும் படிங்க : நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
குறிப்பாக பின் வரிசையில் டோனவன் பெரேரா, ஷுபம் துபே ஆகிய இருவரும் முக்கியமான நேரத்தில் ரன்களை குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்வியின் மூலம் சில துறைகளில் முன்னேற்றத்தை காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம். நிச்சயம் இந்த தவறுகளை சரி செய்து கொண்டு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வெற்றி கணக்கிற்கு திரும்பவும் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



