டெல்லி அணியின் தோல்விக்கு இவர்கள் செய்த தவறுகளே காரணம் – வெளிப்படையாக பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.

DCvsKXIP

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரை தவிர மற்ற யாரும் 15 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் 53 ரன்களையும், மேக்ஸ்வெல் 32 ரன்களை குவித்தனர். இறுதியில் தீபக் ஹூடா மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் அணி கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pooran

இந்நிலையில் இந்தப் போட்டிக்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய திடீரென்று கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் 10 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம் என்று கருதுகிறேன். இந்த போட்டியில் இருந்து நாம் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்கள் அணிக்கு ஒரு பிளஸ். ஆனால் துஷார் எங்கள் அணியில் அதிக ரன்களை பவுலிங்கின் போது விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இருந்தாலும் இதுபோன்ற மோசமான செயல்களில் இருந்து மீண்டு வருவோம். இந்த மைதானத்தை தவான் நன்கு அறிந்திருந்தார். அதற்கேற்றார் போல் அவர் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடினார். கடந்த இரண்டு போட்டிகளாக அவர் மிக வேகமாகவும் விளையாடி வருகிறார். அவரின் இன்னிங்ஸ் இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது.

dc

மேலும் இனிவரும் போட்டிகளில் அவர்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் மோசமான தோல்விக்கு காரணம் பவுலிங்கின் போது அதிக ரன்களை லீக் செய்தது தான் என்றும் இனிவரும் போட்டிகளில் பலமாக திரும்பி வருவோம் என்று ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement