டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
டெல்லி அணிக்கெதிரான தோல்விக்கு பின் பேசிய : ஷ்ரேயாஸ் ஐயர்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 210 ரன்களை குவிக்க பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியில் 210 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். அதே போன்று இந்த மைதானத்தை பொருத்தவரை வேரியபிள் பவுன்ஸ் இருந்ததால் நாங்கள் 30 ரன்கள் வரை கூடுதலாகவே அடுத்ததாக நினைக்கிறோம்.
ஆனாலும் இந்த போட்டியின் போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்டுத்தி வெற்றியை நோக்கி நகர்ந்தார்கள். இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகம் இருந்ததால் யுஸ்வேந்திர சாஹலுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்காமல் விட்டுவிட்டோம்.
இதையும் படிங்க : சாதனையுடன் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி – விவரம் இதோ
இன்றைய போட்டியில் அடைந்த தோல்வி எங்களை மிகவும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. நிச்சயம் நாங்கள் அடுத்த போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



