இந்த 3 மேட்ச்ல நான் இப்படி அசத்தலா பேட்டிங் பண்ண இதுவே காரணம் – தொடர்நாயகன் ஷ்ரேயாஸ் பேட்டி

Shreyas-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஏற்கனவே சில வீரர்கள் காயம் அடைந்தும், சில வீரர்கள் ஓய்வு காரணமாகவும் வெளியேறியதால் பல வீரர்களுக்கு மீண்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விராத் கோலி ஓய்வு காரணமாகவும், சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாகவும் வெளியேறிய நிலையில் நீண்ட நாட்களாக நிரந்தர இடம் இன்றி தவித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த டி20 தொடரில் மூன்றாவது இடத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

Shreyas

- Advertisement -

விராட் கோலி களமிறங்கும் அந்த மூன்றாவது இடத்தில் இறங்கும் வீரர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த வேளையில் ஷ்ரேயாஸ் அய்யர் அந்த இடத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே கூறலாம். ஏனெனில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் குவித்த அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக சேசிங் செய்ய உதவினார்.

இரண்டாவது போட்டியில் 74 ரன்களும், மூன்றாவது போட்டியில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகளிலும் அவர் ஒருமுறை கூட ஆட்டமிழக்காமல் மூன்று போட்டிகளிலுமே அரைசதம் கடந்து 204 ரன்கள் எடுத்து இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக அவருக்கு நேற்றைய போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது ஆகிய இரண்டுமே கிடைத்தது.

shreyas 1

டி20 இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் வந்த பிறகு அணியில் நிரந்தர இடம் இன்றி தவித்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்த தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் தொடர்ந்து இந்திய அணியில் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஆஸ்திரேலியா செல்லும் உலகக்கோப்பை இந்திய அணியிலும் ஷ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்றும் அவர் டாப் 4 வீரர்களில் ஒரு இடத்தில் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியுள்ள ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனான ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் : இந்த மூன்று போட்டிகளில் நான் விளையாடிய அனைத்து இன்னிங்ஸ்களுமே எனக்கு ஸ்பெஷலான ஒன்றுதான் ஆனாலும் 2வது டி20 போட்டியில் நான் அடித்த 74 ரன்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்தவை. 184 ரன்களை சேசிங் செய்யும்போது அணிக்காக முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன்.

shreyas iyer 1

அதன்படி அந்த போட்டியில் இந்திய அணி இலக்கை வெற்றிகரமாக துரத்த எனது பேட்டிங் உதவியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த தொடரில் நிச்சயம் நான் மீண்டும் பார்முக்கு திரும்பி பெரிய இன்னிங்ஸ் விளையாடுவேன் என்று நினைத்தேன். அதன்படி பந்துகளை நன்றாக பார்த்து சரியாக விளையாடியதால் என்னால் இந்த மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடிந்தது. இந்த தொடருக்கு முன்னர் நான் எடுத்துக்கொண்ட பயிற்சியும் இந்த தொடரின் போது நான் சிறப்பாக விளையாட உதவியது.

இதையும் படிங்க : இலங்கையை தனி ஒருவனாக கதறவிட்ட ஷ்ரேயஸ் ஐயர் – விராட் கோலியை முந்தி புதிய மாஸ் சாதனை

இந்த தர்மசாலா மைதானத்தில் விக்கெட் சற்று வித்தியாசமாக இருந்தாலும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக அவுட் ஃபீல்ட் மிகவும் வேகமாக இருந்ததால் சரியான இடைவெளியில் பந்துகளை அடித்தால் பவுண்டரிக்கு பறக்கிறது. எந்த மைதானத்தில் நாம் விளையாடினாலும் அந்த மைதானத்தையோ அல்லது அந்த சூழ்நிலையோ ஒரு குற்றமாக செல்லக்கூடாது அதற்கேற்றால் போல் நம்மை தகவமைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தனது ஆட்டம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement