இலங்கையை தனி ஒருவனாக கதறவிட்ட ஷ்ரேயஸ் ஐயர் – விராட் கோலியை முந்தி புதிய மாஸ் சாதனை

Shreyas-iyer
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்ற இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் நடந்த இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146/5 ரன்கள் எடுத்தது.

shreyas iyer 1

- Advertisement -

ஒரு கட்டத்தில் 60/5 என தடுமாறிய இலங்கை அணியை கடைசி நேரத்தில் களமிறங்கி தூக்கி நிறுத்திய அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனாகா வெறும் 38 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட அரைசதம் அடித்து 74* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தெறிக்கவிட்ட ஷ்ரேயஸ் ஐயர்:
இதை அடுத்து 147 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் ஜோடியாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 (12) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை பந்துவீச்சாளர்களை சரமாரியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடிக்கத் துவங்கினார். தொடர்ந்து இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர் 45 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 73* ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார்.

இவருடன் தீபக் ஹூடா 21 (16) ரன்களும் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 15 பந்துகளில் 22* ரன்கள் எடுத்து சூப்பர் பினிசிங் கொடுத்ததால் 16.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 148/4 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே அபார வெற்றி பெற்ற இந்தியா இந்த வெற்றியையும் சேர்த்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி மற்றும் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி போன்ற உலக சாதனைகளைப் படைத்த இந்தியா சொந்த மண்ணில் கில்லி என நிரூபித்து நம்பர் டி20 அணி என்ற பெயருடன் வெற்றி நடை போடுகிறது.

Shreyas

ஷ்ரேயஸ் ஐயர் மாஸ் சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் 73* ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய விருதுகளை வென்று அசத்தினார். இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இலங்கையை பந்தாடிய அவர் முறையே 57* (28) மற்றும் 74* (44) ரன்களை அடித்தார். சொல்லப்போனால் இலங்கைக்கு எதிரான இந்த 3 டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 அரை சதங்கள் அடித்துள்ள அவர் ஒரு போட்டியில் கூட அவுட்டாகாமல் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

- Advertisement -

மொத்தத்தில் இந்த 3 போட்டிகளிலும் 3 தொடர்ச்சியான அரை சதங்கள் உட்பட 204 ரன்களை 204.00 என்ற மிரட்டலான சராசரியில் 174.35 என்ற மிரளவைக்கும் ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசியுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முந்தியுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனை படைத்துள்ளார்.

Shreyas Iyer With Virat Kohli

இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டி20 தொடரில் 199 ரன்களை விளாசிய விராட் கோலி அந்த சாதனை தன்வசம் வைத்திருந்தார். ஆனால் தற்போது 204 ரன்கள் குவித்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 200 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்று விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

- Advertisement -

சர்வதேச டி20 போட்டிகளில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1. ஷ்ரேயஸ் ஐயர் : 204 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022.
2. விராட் கோலி : 199 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2016.
3. விராட் கோலி : 183 ரன்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2019.
4. கேஎல் ராகுல் :164 ரன்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2019.

இதையும் படிங்க : பாவம் அவங்க 2 பேர் பயங்கரமா பிராக்டீஸ் பண்ணாங்க. அதான் நான் பவுலிங் போடல – ஜடேஜா கொடுத்த விளக்கம்

இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்துள்ளார். அத்துடன் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரை சதங்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு பின் பெற்றார்.

Advertisement