இந்திய அணியின் முன்னணி சீனியர் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்து நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் என இரண்டு தொடர்களையும் தவறவிட்டார். அதன்பிறகு தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்ட ஜடேஜா தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இணைந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இணைந்த ஜடேஜாவிடமிருந்து எந்த அளவிற்கு சிறப்பான ஆட்டம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தனது அற்புதமான பேட்டிங்கை ஜடேஜா வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கடைசியாக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி மற்றும் நேற்று நடைபெற்று முடிந்த 3வது டி20 போட்டி என இரண்டு போட்டிகளிலுமே 4-வது வீரராக முன்கூட்டியே களமிறங்கிய ஜடேஜா ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் முதல் ஆட்டங்களிலும் பவுலிங் செய்த ஜடேஜா நேற்றைய போட்டியில் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. நேற்று ஜடேஜா பந்து வீசாமல் இந்திய அணி பந்துவீச்சில் 5 பந்துவீச்சாளர்களை கொண்டு அசத்தலாக பந்து வீச்சு இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது இந்நிலையில் தான் ஏன் இந்த மூன்றாவது போட்டியில் ஏன் பந்து வீசவில்லை என்பது குறித்து ஜடேஜா ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த மூன்றாவது போட்டிக்காக இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் விளையாடும் வாய்ப்பினை பெற்றனர். போட்டி நாளைக்கு முன்னதாகவும் சரி, அந்த நாளிலும் சரி இந்த 3 ஆவது போட்டியில் விளையாட வேண்டும் என்று அவர்கள் கடினமாக பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
எனவே இந்த மூன்றாவது போட்டியில் அவர்களுக்கு ஒரு மேட்ச் பிராக்டீஸ் கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நான் நேற்றைய போட்டியில் பந்து வீசவில்லை. அவர்களுக்கு முழுவதுமாக பந்துவீச ஓவர்கள் கிடைக்க வேண்டும் என்பதன் காரணமாகவும் நான் பந்துவீசவில்லை என்று ஜடேஜா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : காயத்திலிருந்து மீண்டு வர எனக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நல்ல சிகிச்சை மற்றும் பயிற்சி கிடைத்தது.
இதையும் படிங்க : என்னாங்க பெரிய ஹிட்மேன்! இந்திய கேப்டன் ரோஹித்தை பொட்டி பாம்பாக அடக்கிய இலங்கை பவுலர் – முழு விவரம் இதோ
அங்கு உள்ள பயிற்சியாளர்கள் என்னை விரைவாக நல்ல திறனுடன் மீண்டு வர உதவினார்கள். இந்த டி20 தொடருக்காகவும், டெஸ்ட் தொடருக்காகவும் தயாராக நான் அங்கு சிறப்பான பயிற்சி பெற்றதாக ரவீந்திர ஜடேஜா கூறினார். நேற்றைய போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பினைப் பெற்ற குல்தீப் யாதவ் 4 பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 22 ரன்களையும், ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை எடுத்து 32 ரன்களையும் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



