என்னாங்க பெரிய ஹிட்மேன்! இந்திய கேப்டன் ரோஹித்தை பொட்டி பாம்பாக அடக்கிய இலங்கை பவுலர் – முழு விவரம் இதோ

Chameera
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று லக்னோவில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா பிப்ரவரி 26இல் இமாச்சலத்திலுள்ள தரம்சாலா மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முன்கூட்டியே கைப்பற்றியது.

shreyas iyer

- Advertisement -

இதை அடுத்து இந்த தொடரின் சம்பிரதாய கடைசி 3வது போட்டி நேற்று இரவு 7 மணிக்கு அதே தரம்சலா மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 146/5 ரன்கள் எடுத்தது. 29/4 என மோசமான தொடக்கம் பெற்ற அதிகபட்சமாக அந்த அணிக்கு கேப்டன் தசுன் சனாகா 74* (38) ரன்கள் விளாசினார்.

இந்தியா உலகசாதனை வெற்றி:
இதை அடுத்து 147 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் விசுவரூபம் எடுத்து அதிரடியாக பேட்டிங் செய்ய துவங்கினார். மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் அவர் 45 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 73* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். அவருடன் கடைசி நேரத்தில் ஜடேஜா 22* ரன்கள் எடுக்க 16.5 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது.

முன்னதாக கடந்த நவம்பர் நியூசிலாந்துடன் நடந்த டி20 தொடரையும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் 3 – 0 என்ற கணக்கில் அடுத்தடுத்த ஒயிட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்திருந்த இந்தியா த்ற்போது மீண்டும் வைட்வாஷ் வெற்றியை பெற்றதன் காரணமாக சொந்த மண்ணில் கடைசியாக நடந்த 3 டி20 தொடர்களில் ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றியைப் பெற்று சொந்த ஊரில் நாங்கள் தான் ராஜா என நிரூபித்துள்ளது. மேலும் இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி (12 வெற்றிகள்) மற்றும் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த அணி (40 வெற்றிகள்) என்ற 2 புதிய உலக சாதனையை இந்தியா படைத்தது.

- Advertisement -

பேட்டிங்கில் சொதப்பிய ஹிட்மேன்:
இந்த தொடரில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா மீண்டும் தனது அதிரடியான அபார கேப்டன்ஷிப் வாயிலாக இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்தார். மேலும் இந்த தொடர் வெற்றிகளால் ஏற்கனவே இந்தியாவை உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக தரம் உயர்த்தியுள்ள அவர் இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் (இந்திய மண்ணில் 16 வெற்றிகள்) என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார்.

Rohith-1

இப்படி கேப்டன்ஷிப்பில் மிரட்டும் அவர் இந்த டி20 தொடரில் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. லக்னோவில் நடந்த முதல் போட்டியில் 44 ரன்கள் எடுத்த அவர் அதன் பின் நடந்த கடைசி 2 டி20 போட்டிகளில் முறையே 1 மற்றும் 5 என ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பெட்டிப்பாம்பாக அடங்கிய ஹிட்மேன்:
இந்நிலையில் கடைசி 2 டி20 போட்டிகளில் ஆச்சரியப்படும் வண்ணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீராவிடம் ரோகித் சர்மா அவுட்டானர். ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக கருதப்படும் ரோகித் சர்மா இதற்கு முன்பும் கூட அவரிடம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

Dushmantha Chameera

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் இலங்கையின் துஷ்மந்தா சமீராவுக்கு எதிராக இதுவரை 30 பந்துகளை சந்தித்துள்ள ரோகித் சர்மா அதில் 32 ரன்களை 6 முறை அவுட்டாகி உள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவை அதிக முறை அவுட் செய்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கெதிராக நாங்கள் இப்படி மோசமான தோக்க இதுவே காரணம் – இலங்கை கேப்டன் புலம்பல்

இத்தனைக்கும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (125 போட்டிகள்), அதிக ரன்களைக் குவித்த வீரர் (3313 ரன்கள்), அதிக சதங்களை அடித்த வீரர் (4 சதங்கள்) ஆகிய உலக சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனையோ தரமான வேகப்பந்து வீச்சாளர்களை பந்தாடும் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். இதனால் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் அவர் கத்துக்குட்டி இலங்கையைச் சேர்ந்த ஒரு பவுலரிடம் இப்படி பெட்டி பாம்பாக அடங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement