டிராவிடும் ரஹானேவும் தான் என்னிடம் வந்து சொன்னார்கள். முதல் சதம் குறித்து பேசிய – ஷ்ரேயாஸ் ஐயர்

Iyer-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய இந்திய அணியானது தற்போது முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அறிமுக வீரராக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 176 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

iyer 1

- Advertisement -

மேலும் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16-ஆவது இந்திய வீரர் என்று சாதனை படைத்த அவர் தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த சதம் மற்றும் அறிமுகமானது பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் : இந்திய டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்படும் போது நான் விளையாடுவேன் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை.

ஆனால் போட்டி நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் கேப்டன் ரஹானே மற்றும் பயிற்சியாளர் டிராவிட் என்னிடம் வந்து நீ முதல் போட்டியில் விளையாடுகிறாய் என்ற தகவலைத் தெரிவித்தனர். இதனால் நான் அவசர அவசரமாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தயாரானேன். ஏனென்றால் கடைசியாக நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும். தொடர்ந்து நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடி வருகிறேன்.

iyer 4

எனவே நீண்ட இடைவெளிக்கு பின்னர் டெஸ்ட் வடிவத்திற்கு திரும்புவது சற்று கடினமாக இருந்தாலும் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது தான் என்னுடைய லட்சியம் என்று நினைத்ததால் அதை சமாளித்து விடுவோம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. அதே நேரத்தில் சற்று பதட்டத்துடன் இருந்தேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கவாஸ்கர் கையில் நான் அறிமுக தொப்பியை பெற்றபோது அந்த தருணத்தை நினைத்து கூட பார்க்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நான் பார்த்து வளந்த பையன். இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா மாறியிருக்கான் – பாண்டிங் மகிழ்ச்சி

ஏனெனில் ராகுல் டிராவிட் தான் என்னிடம் அறிமுக தொப்பியை கொடுப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் கவாஸ்கர் எனக்கு அந்த அறிமுக தொப்பியை வழங்கியது என்னால் மறக்க முடியாதது. இந்த போட்டியில் சதம் அடித்ததும் என்னால் மறக்க முடியாத ஒன்று என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement