இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 500 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். ஆனாலும் அதன் பின்னர் தென்னாப்பிரிக்க தொடர் நடைபெற்று முடிந்து நாடு திரும்பிய கையோடு அவர் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் பி.சி.சிஐ-யின் அந்த கோரிக்கையை ஏற்காதவர் காயம் காரணமாக தன்னால் உள்ளூர் போட்டியில் விளையாட முடியாது என்று அறிவித்தார்.
நான் சாதிக்க அவர்தான் காரணம் : ஷ்ரேயாஸ் ஐயர்
அதனை தொடர்ந்து அவரின் மீது அதிரடியான நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அவரை மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. அதன்பிறகு இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும் அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவர் 2024 ஐ.பி.எல் தொடரின் போது கொல்கத்தா அணியின் கேப்டனாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார்.
பிறகு மும்பை அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரையும் வென்று கொடுத்தார். இப்படி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற அவருக்கு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பான செயல்பட்ட அவர் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்ந்தார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்ற சைலன்ட் ஹீரோவாக ஷ்ரேயாஸ் ஐயர் திகழ்ந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் வெளிப்படையாக தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது தனக்கு திருப்திகரமாக அமைந்தாலும் அதற்கு முன்னதாக வாழ்க்கை பயணத்தில் நிறைய கஷ்டங்களை கற்றுக் கொண்டேன் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : 2023 உலக கோப்பை தொடரில் நான் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தேன். ஆனாலும் பிசிசிஐ என்னை ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது.
அப்போது நான் என்ன தவறு செய்தேன்? எதனால் இப்படி நடந்தது? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு எனது உடற்தகுதியை மேம்படுத்துவதில் மட்டும்தான் கவனத்தை செலுத்தினேன். பின்னர் எனக்குள் இருந்த கேள்விகள் என்னை சிறப்பாக செயல்பட தூண்டியது. அதன் பிறகு நான் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடர் என அடுத்தடுத்து கோப்பைகளை வென்றேன். ஐபிஎல் தொடரை பொருத்தவரை எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே தோன்றியது.
இதையும் படிங்க : சென்னைக்கு போலாம்னு இருந்த நேரத்தில் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது – வருண் சக்ரவர்த்தி பூரிப்பு
நான் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த போது என்னுடன் சிலபேர் மட்டும் தான் பேசினார். அதில் முக்கியமான ஒரு நபர் யாதெனில் : என்னுடைய பயிற்சியாளர் சாகர்தான். இன்று நான் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்த அவர் கொடுத்த ஆலோசனைகளும், அறிவுரைகளும் தான் காரணம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



