அவங்க ரெண்டு பேர் இருக்கும் வரை மும்பை அணியை கண்ட்ரோல் பண்ணுவது கஷ்டம் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

- Advertisement -

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

pandya 1

போட்டி முடிந்து தோல்வி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அய்யர் கூறுகையில் : மும்பை அணியின் பேட்ஸ்மேன் பொல்லார்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா பற்றியும் புகழ்ந்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் தற்போது சிறப்பான பேட்டிங் பார்மில் உள்ளனர். அதிலும் குறிப்பாக பொல்லார்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பின்வரிசையில் அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைகிறார்கள்.

Pandya-2

அவர்கள் இருவரும் பின்வரிசையில் பலமாக இருக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது சாதாரணமான விடயமல்ல. இருப்பினும் அடுத்த போட்டியில் நாங்கள் நல்ல போட்டியை விளையாட விரும்புகிறோம் என ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement