Shreyas Iyer : இந்த மூன்று ஓவர்களே நாங்கள் தோற்க காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் சப்பக்கட்டு

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

rohith

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை அடித்தது. மும்பை அணி சார்பில் அதிககபட்சமாக க்ருனால் பாண்டியா 37 ரன்களும், டிகாக் 35 ரன்களும் மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஹார்டிக் பாண்டியா 32 ரன்களை அடித்தார்.

- Advertisement -

பிறகு 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தவான் 35 ரன்களை குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர் ராகுல் சஹர் 4 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

ragul chahar

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : சொந்த ஊரில் நடக்கும் போட்டிகளில் வெற்றிபெறுவது முக்கியமானது. முதலில் நாங்கள் டாஸ் இழந்தது மட்டும் மும்பை அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடினார்கள் இந்த வெற்றி அவர்களுக்கு உண்டானதே. வலைப்பயிற்சியிலேயே பந்து நின்று வந்தது அதனால் மைதானம் ஸ்லோ பிட்ச் என்பது அப்போதே தெரிந்தது.

கடைசியில் 20 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்து விட்டோம். கடைசியில் டெத் ஓவரை யாரை வீச வைக்கவேண்டும் என்ற குழப்பம் அதிகாமாக இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்துவிட்டோம். ஹார்டிக் பாண்டியா அந்த 3 ஓவர்களில் போட்டியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Advertisement