நான் வெறும் டம்மி கேப்டன் தான், செலக்சன் எல்லாம் அவங்க தான் பன்றாங்க – ஷ்ரேயஸ் ஐயர் பரபர குற்றசாட்டு

Shreyas-2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மே 9-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 56-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் ஏற்கனவே 8 தோல்விகளைப் பெற்று அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறி விட்டதால் கவலை இல்லாமல் மும்பை களமிறங்கியது. ஆனால் 7 தோல்விகளை பதிவு செய்த காரணத்தால் இந்த போட்டி கொல்கத்தாவுக்கு வாழ்வா சாவா என்ற போட்டியாக அமைந்தது.

Rohit Sharma vs KKR Shreyas Iyer

- Advertisement -

அந்த சூழ்நிலையில் நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் போராடி 165/9 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக வெங்கடேஷ் ஐயர் 43 (24) ரன்களும் நிதிஷ் ராணா 43 (26) ரன்களும் எடுத்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக கடைசிநேர பந்துவீச்சில் மிரட்டிய நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

தப்பிய கொல்கத்தா:
அதை தொடர்ந்து 166 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு இஷன் கிஷன் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (43) ரன்கள் எடுத்து போராடினாலும் கேப்டன் ரோஹித் சர்மா 2 (6) திலக் வர்மா 6 (5) ரமந்தீப் சிங் 12 (16) டிம் டேவிட் 13 (9) என முக்கிய வீரர்கள் அனைவரும் கொல்கத்தாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே தோல்வியை உறுதி செய்தனர். ஒரு கட்டத்தில் இஷான் கிசனும் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைரன் பொல்லார்ட்டும் 15 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 17.3 ஓவரில் 113 ரன்களுக்கு சுருண்ட மும்பை மீண்டும் தோல்வி அடைந்து 9-வது தோல்வியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் வலுவாக கடைசி இடத்தை பிடித்தது.

Rohit Sharma vs KKR

கொல்கத்தா சார்பில் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் அன்ரே ரசல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டதால் தப்பிய கொல்கத்தா 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5-வது வெற்றியை பதிவு செய்து 7-வது இடத்துக்கு முன்னேறியதுடன் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

சொதப்பலான மாற்றம்:
முன்னதாக இந்த வருட ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் புத்துணர்ச்சியாக களமிறங்கிய கொல்கத்தா முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து முதல் வாரத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஆனால் அதன்பின் தேவையில்லாத மாற்றங்களை செய்ததால் தொடர்ச்சியாக 5 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி புள்ளிப் பட்டியலில் கடைசி 5 இடங்களுக்குள் தள்ளப்பட்டு தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல போராடி வருகிறது.

DC vs KKR Shreyas Iyer Rishabh Pant

ப்ளெயிங் லெவனில் இடையிடையே அந்த அணி நிர்வாகம் செய்த ஏகப்பட்ட குளறுபடியான மாற்றங்கள் தான் இந்த தோல்விகளுக்கான காரணம் என்று பல முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே பேசியிருந்தனர். குறிப்பாக ஓப்பனிங்கில் ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு வீரர்களை களமிறக்கும் அந்த அணி நேற்றைய போட்டியில் கூட புதிதாக வெங்கடேஷ் ஐயர் – ரகானேவை களமிறக்கியது. மேலும் உச்சபட்சமாக நேற்றைய போட்டியில் ப்ளெயிங் லெவனில் 5 மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

டம்மி கேப்டன்:
இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது மிகப்பெரிய உண்மையை போட்டு உடைத்தார். அதாவது பெரும்பாலும் விளையாடும் 11 வீரர்களை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் மட்டுமே இணைந்து தீர்மானிப்பார்கள். ஆனால் கொல்கத்தா அணி வீரர்களை தேர்வு செய்வதில் அதன் தலைமை நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் (சிஇஓ) தலையிடுவதால் தம்மால் எதையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை என்று ஸ்ரேயாஸ் அய்யர் வேதனை தெரிவித்தார்.

KKR

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த போட்டியில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பின் இந்த போட்டியில் மிகபெரிய வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் எதிரணி பவுலர்களை குறி வைத்து அடித்தார். மேலும் ஒரு போட்டியில் ஒரு வீரரிடம் உங்களை நீக்கப்போகிறோம் என்று கூறும் நிலை ஏற்படுவது கடினமாக இருக்கிறது. நிறைய தருணங்களில் பயிற்சியாளர் மற்றும் சிஇஓ ஆகியோர் அணி தேர்வுகளில் தலையிடுகிறார்கள். இருப்பினும் அதை அனைத்து வீரர்களும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு தங்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement