இவர் ஒருவரிடம் மட்டும் விக்கெட் விடக்கூடாது என்று நினைத்தோம். இந்த பவுலர் ரொம்ப டேஞ்சர் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்

Iyer

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

srhvsdc

அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 50 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு துவக்க வீரர் என ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் இறுதி நேரத்தில் 22 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் அதிரடியாக 42 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 33 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக ரபாடா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் அறிவிக்கப்பட்டார்.

rabada

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஐயர் வெற்றிக்கான காரணங்களை பகிர்ந்து கொண்டதன் பின்னர் ரஷீத் கான் பந்துவீச்சை எதிர்கொள்வதில் உள்ள அச்சம் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி நாங்கள் 10 ரன்கள் ரேட்டில் ஆட்டத்தை துவக்கினாலும் மிடில் ஓவரில் ரசித் கான் எங்களது விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் ரேட்டை கட்டுப்படுத்துவார் என நினைத்தோம்.

- Advertisement -

rashid

அதனால் அவர் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக அவர் ஓவரில் நாங்கள் விக்கெட்டுகளை கொடுக்கக்கூடாது எனவும் முடிவு எடுத்தோம். அதன்படி இன்றைய போட்டியில் அவர் என்னுடைய விக்கெட்டை கைப்பற்றினாலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடியதாக கருதுகிறோம் என ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.