எஞ்சியுள்ள 2 போட்டிகளில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய நட்சத்திர வீரர் – இந்திய அணிக்கு ஏற்பட்ட சிக்கல்

Iyer-1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது இந்தியாவுக்கு ஒரு பெரிய இழப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்தும் அணியில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி முதலாவது போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் பெரிய அளவு சோபிக்கவில்லை. இருப்பினும் கடந்த பல தொடர்களாகவே நான்காவது இடத்தில் உறுதியாக விளையாடி வரும் அவர் இந்த தொடரின் 4வது இடத்தில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த முதல் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ அடித்த பந்தை பிடிக்க சென்ற ஐயர் தோள்பட்டை பகுதியில் காயமடைந்தார்.

காயமடைந்து வலியில் துடித்த அவர் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்கு காயம் சிறிதாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தோல்பட்டையில் எலும்பு நகர்வு ஏற்பட்டுள்ளதாகவும், டிஸ்லொகேஷன் ஆனதாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

iyer

மேலும் அறுவைசிகிச்சைக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு அய்யர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அவர் இந்தத் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது மேலும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலும் அவர் விளையாடமாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

iyer 2

அதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்ற தகவல் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக மாறியுள்ளது. மேலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.