இந்த வருட முழுத்தொடரிலும் இவரால் ஆட முடியாதாம். காயம் குணமைடய 5 மாசம் ஆகுமாம் – கலக்கத்தில் டெல்லி அணி

Iyer

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐயருக்கு இடது கை தோள்பட்டை இடப்பெயர்வு ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 317 ரன்கள் குவித்தது.அதை செய்ய இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ அடித்த ஒரு பந்தை தடுக்கும் வேளையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முழு எடையையும் இடதுகை தங்குமாறு மைதானத்தில் விழுந்தார்.

Iyer

இதன் காரணமாக அவரது இடது கை தோள்பட்டை இடம் பெயர்ந்தது.ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ குழு அறிவித்ததையடுத்து , ஸ்ரேயாஸ் இயர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.மேலும் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஸ்ரேயாஸ் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் செய்த பிறகு நிச்சயம் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு அவருக்கு ஓய்வு தேவைப்படும் என்று மருத்துவ குழு அறிவித்ததை அடுத்து இனி ஸ்ரேயாஸ் அய்யர் செப்டம்பர் மாதத்தில்தான் கிரிக்கெட் விளையாட தொடங்குவார் என்று பிசிசிஐ சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு நடக்க உள்ள 14 வது ஐபிஎல் லீக் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட போவதில்லை என்று உறுதியாகியுள்ளது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

iyer

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்த இரு ஆண்டுகளில் டெல்லி அணி 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் கேப்டனாக தனது முதல் தொடரில் அந்த அளவுக்கு எதுவும் பெரிதாக செய்யாத நிலையில் அதற்கு அடுத்த வருடம் 2019 ஆம் ஆண்டில் டெல்லி அணியை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்தார். பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டரில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் குவாலிபயர் 2 இருக்கு டெல்லி அணியை தகுதி பெற செய்தார்.

- Advertisement -

இருப்பினும் குவாலிபயர் 2 வில் அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து 2018 ஆம் ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த டெல்லி அணி 2019ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தில் தொடரை முடித்தது இது அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது. பின்னர் அதற்கு அடுத்த ஆண்டான முந்தைய ஆண்டு ஐபிஎல் லீக் தொடரின் இறுதிப்போட்டி வரை டெல்லி அணியை ஷ்ரேயாஸ் வழிநடத்திச் சென்றார். இருப்பினும் இறுதி போட்டியில் மும்பை அணியிடம் டெல்லி அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக ரன்னர் அப் பட்டத்தை வென்றது.

Iyer-1

ஆனால் டெல்லி அணி 13 வருட காலத்தில் முதல் இறுதிப் போட்டியை விளையாடியது அந்தப் போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.மிக சாமர்த்தியமாக டெல்லி அணியை கடந்த இரு ஆண்டுகளாக வழிநடத்திச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் தற்பொழுது இல்லாத காரணத்தினால் வேறு யார் கேப்டனாக டெல்லி அணிக்கு பதவியை ஏற்கப் போகிறார்கள் என்று டெல்லி ரசிகர்கள் ஒரு பக்கம் ஆவலுடனும் மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாமல் டெல்லி அணி எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறது என்று சோகத்திலும் உள்ளனர்.