எவ்ளோ பாராட்டுனாலும் அது இவருக்கு கம்மிதான்.. விராட் கோலியின் இன்னிங்க்ஸ் குறித்து – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas and Kohli
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக வடோதரா நகரில் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 301 ரன்கள் என்கிற சவாலான இலக்கினை மிகச் சிறப்பாக சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த முதலாவது போட்டியில் :

விராட் கோலியை எவ்ளோ பாராட்டினாலும் அது கம்மிதான் : ஷ்ரேயாஸ் ஐயர்

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்ததால் இந்திய அணிக்கு 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும் அதனை மிகச்சிறப்பாக துரத்திய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 91 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 93 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சதம் அடிக்கவில்லை என்றாலும் அவரது இந்த பொறுப்பான இன்னிங்ஸ் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த சிறப்பான இன்னிங்ஸ் குறித்து பாராட்டி பேசியிருந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் குறித்து நாம் என்னதான் பாராட்டினாலும் அது மிக குறைவானது தான் என்று கூறுவேன். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை தான் தொடர்ச்சியாக இந்திய அணிக்காக வழங்கி வருகிறார்.

- Advertisement -

அவருடன் களத்தில் விளையாடும் போது மிகச்சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அவர் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதும், பவுலர்களை எதிர்த்து அதிரடியாக ஆடுவதையும் எதிரில் இருந்து பார்க்கும்போது சிறப்பாக இருக்கிறது. வெளியில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆட்டம் அதை தூள் தூளாக்குகிறது என்று விராட் கோலியின் இந்த இன்னிங்ஸை ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க : நான் விளையாடியதில் பெஸ்ட் ஐ.பி.எல் கேப்டன் சஞ்சு சாம்சன் தான்.. காரணத்தோடு பாராட்டிய – யுஸ்வேந்திர சாஹல்

அதோடு தனது கம்பேக் குறித்து பேசியிருந்த அவர் : இந்த தொடர் எனக்கு மிகச் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது. ஏனெனில் காயத்திற்கு பிறகு மீண்டும் வந்த முதல் போட்டியிலேயே மிகச் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறேன். அதுமட்டுமின்றி இந்திய அணியின் ஓய்வறையில் இருப்பதும் எனக்கு நல்ல தருணமாக இருக்கிறது.

Advertisement