உடைந்த விரலுடன் 439 ரன்கள். இந்தியாவின் அடுத்த கேப்டன் தயார். ரிக்கி பாண்டிங்கின் வளர்ப்பு – விவரம் இதோ

Iyer
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கேப்டனாக ஆடிவருகிறார். பல ஆண்டுகளாக இந்திய அணியில் 4வது இடம் வெற்றிடமாக இருந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த இடத்தை தற்போது கெட்டியாக பிடித்துக் கொண்டவர் இவர்.

Iyer-1

- Advertisement -

உலக கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் கிட்டத்தட்ட இவர் நிரந்தர இடம் பிடித்து விட்டார் என்றுதான் தெரிகிறது. ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது கேப்டனாகவும் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் இவர்.

ஐபிஎல் 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆடி வரும் இவர் 2018 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். இவருக்கு கேப்டன் ஆகும் தகுதி இருக்கிறது என்று சொன்னவர் வேறு யாருமில்லை ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்தான். அவரே இவரை சரியாக வழி நடத்தி தற்போது வரை ஒரு கேப்டனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் ஸ்ரேய்ஸ் ஐயர்.

இவர் கேப்டன் ஆனவுடன் பல ஆண்டுகாலம் கழித்து டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை பற்றி பேசியுள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் கூறுகையில்…

- Advertisement -

முதன்முதலாக 2015ஆம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் விளையாடினேன். அந்த சீசன் முழுவதும் உடைந்த விரலுடன் ஆடி 439 ரன்கள் குவித்து எனது விரல் அடிபட்டு இருந்தது. இது பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனுக்கு தெரியும். இருந்தாலும் அவர் என்னிடம் வந்து, ‘நீ இந்த அணிக்கு பேட்டிங் மட்டும் ஆடி கொடுத்தால் போதும்’, ‘பீல்டிங் செய்யும் போது மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மறைந்து கொள்ளலாம். பந்து வராத இடத்தில் நின்று கொள் என்று கூறி எனக்கு வாய்ப்பளித்தார்.

iyer

ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல பேட்ஸ்மேன் என்று நிரூபித்துவிட்டார். அடுத்ததாக இந்திய அணிக்கும் இவர் கேப்டனாக வாய்ப்பிருக்கிறது. காலமும் நேரமும் சரியாக அமைந்தால் ஹர்திக் பாண்டியா. கேஎல் ராகுல். ரிஷப் பண்ட் என இளம் வீரர்களை பின்தள்ளி விட்டு இவர் கேப்டனாக பல வாய்ப்புகள் இருக்கிறது என்பதே நிதர்சனம்.

Advertisement