- Advertisement -
ஐ.பி.எல்

11 வருடம் கழித்து குவாலிபயர் 1க்குள் போக இதான் காரணம்.. மும்பையை சாய்த்த பின் ஸ்ரேயாஸ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 26 ஆம் தேதி ஜெய்ப்பூரில் 69வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு விளையாடத் தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன், விஜயகுமார் வைசக், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187-3 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரியான்ஸ் ஆர்யா 62 (35), ஜோஸ் இங்லிஷ் 73 (42) ரன்களை விளாசி வெற்றிக்கு உதவினர்.

- Advertisement -

11 வருடம் கழித்து:

இதனால் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து குவாலிபயர் ஒன்று போட்டியில் விளையாடுவதற்கு பஞ்சாப் தகுதி பெற்றது. இந்நிலையில் தங்களுடைய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுவதே இதற்கு காரணம் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சிறப்பாக வழி நடத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“எங்கள் வீரர்கள் அனைவரும் சரியான நேரத்தில் கால் தடம் பதிக்கின்றனர் என்று கருதுகிறேன். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். பாண்டிங் சிறப்பாக செயல்படுகிறார். என்னைப் பொறுத்த வரை எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்”

- Advertisement -

ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி:

“வெற்றிகளைப் பெறுவதால் அது கிடைக்கிறது. தனிப்பட்ட முறையில் அந்த உறவை கடைசி வரை தொடர வேண்டும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் தோல்வியை சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் குறை சொல்வது எளிது. பிரியான்ஸ் ஆர்யா அதிரடியாக விளையாடி ஆட்டத்தை துவக்கிய விதம் சிறப்பானது. எங்களுடைய வீரர்கள் அனைவரும் பயமின்றி விளையாடுவதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க: 18.3 ஓவரில்.. மும்பையை சாய்த்து குவாலிபயர் 1க்குள் சென்ற பஞ்சாப்.. 11 வருடம் கழித்து அபார வெற்றி

“வலைப்பயிற்சியில் அனைத்து கட்டங்களையும் நிரப்பும் அவர்கள் அதை அப்படியே மைதானத்தில் பிரதிபலிக்கிறார்கள். இங்லிஷ் புதிய பந்தில் விளையாடுவதை விரும்புவதால் அவர் ஆரம்பத்திலேயே அதிக பந்துகளை எதிர்கொள்வதை நான் விரும்புகிறேன். அவர் அதிரடியாக விளையாடக்கூடிய மேட்ச் வின்னர் என்பது எனக்குத் தெரியும். அவர் இப்படியே தொடர்வார் என்று நம்புகிறேன். பாண்டிங்குடன் சில வருடங்களாகவே நல்ல நட்புறவு இருக்கிறது. அவர் களத்தில் என்னைத் தீர்க்கமாக செயல்பட விடுகிறார். எங்களுக்கு அனைத்து விஷயங்களும் சரியான வழியில் செல்கிறது. அனைத்தும் எங்களுக்கு சரியாக வேலை செய்வதில் மகிழ்ச்சி” எனக் கூறினார்.

- Advertisement -