- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய ஒருநாள் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் திரும்புவது எப்போது? வெளியான தகவல் – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது விளையாடியிருந்தார். அந்த தொடரின் இடையே ஒரு போட்டியின் போது கேட்ச் பிடிக்க முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர் டைவ் அடிக்கையில் அடி வயிற்றில் பலமான காயத்தை சந்தித்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? :

அதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய அவர் தீவிர சிகிச்சையை மேற்கொண்டார். அவருக்கு அடி வயிற்றில் பலத்த காயம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியேறியுள்ள அவர் எப்போது மீண்டும் களத்திற்கு திரும்புவார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் டிசம்பர் 30-ஆம் தேதி தனது உடற்தகுதியை நிரூபிக்க இருக்கிறார். பின்னர் மும்பை அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருக்கிறார்.

அதன்படி ஜனவரி 3 மற்றும் 6 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளில் அவர் மும்பை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் ஜனவரி 11-ம் தேதி வடோதராவில் துவங்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசிய மும்பை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளார். அதன்பிறகு இந்திய அணியுடன் இணைவார். தற்போது வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வரும் அவர் எந்த ஒரு அசவுகரியத்தையும் சந்திக்கவில்லை.

இதையும் படிங்க : 15.2 ஓவரில் 162 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. இந்தியாவுக்காக மந்தனா – ஷபாலி ஜோடி.. மகளிர் டி20யில் புதிய சாதனை

அதனால் நிச்சயம் அவர் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இணைவார் என்று உறுதிபட கூறியுள்ளார். இந்திய ஒருநாள் அணியை பொறுத்தவரை துணை கேப்டனாக இருந்து வரும் மிடில் ஆர்டரில் பலத்தை சேர்ப்பவர் என்பதனால் அவரது கம்பேக் இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -