சுப்மன் கில் சொதப்பலால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் வாய்ப்பு – விவரம் இதோ

Gill and Shreyas
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இம்மாதம் ஜனவரி 21-ஆம் தேதி நாக்பூர் நகரில் துவங்க இருக்கிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரரான திலக் வர்மா காயம் காரணமாக இந்த டி20 தொடரில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் :

ஏனெனில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அவர் நேற்று கடுமையான வயிற்று வலி மற்றும் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஒரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நான்கு வாரங்கள் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஒரு வீரரை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அப்படி திலக் வர்மாவிற்கு பதிலாக யார் மாற்று வீரராக வரப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்தவகையில் டி20 அணியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சுப்மன் கில் மீண்டும் இணைவார் என்று ஒருபுறம் தகவல் வெளியாகி வந்தாலும் டி20 போட்டிகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்த காரணத்தினாலேயே அவர் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதனால் அவரை நிச்சயம் இந்திய அணியின் நிர்வாகம் மீண்டும் இந்த தொடருக்கு தேர்வு செய்யாது என்றும் அதே நேரத்தில் டி20 போட்டிகளில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் திறமையாக விளையாடக்கூடிய இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – சுப்மன் கில் வருகிறாரா?

ஏனெனில் 2024 ஐ.பி.எல் தொடரின் போது கொல்கத்தா அணியை வெற்றிகரமாக சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற அவர் கடந்த ஆண்டு நடைபெற்று 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். எனவே அவரது திறன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் டி20 போட்டிக்கு அவரை நிர்வாகம் அழைக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement