நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் நியூசிலாந்து தொடர் ஆரம்பிக்க இருந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் விளையாடிய திலக் வர்மா அடி வயிற்றில் காயத்தை சந்தித்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து அவர் வெளியேறியிருந்தார்.
4 ஆவது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்பு :
அதன் காரணமாக இந்த முதல் 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் திலக் வர்மாவின் இடத்தில் விளையாடி இருந்தார். அதனால் முதல் மூன்று போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் இந்திய டி20 அணியில் இடம் பிடித்ததால் அவருக்கு இந்த தொடரில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் மூன்று போட்டியில் அவர் வாய்ப்பின்றி வெளியில் அமர வைக்கப்பட்டார். இந்நிலையில் முதல் மூன்று போட்டிகளிலும் அசத்திய இஷான் கிஷன் தனது திறமையை நிரூபித்து விட்டதால் எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் இஷான் கிஷன் இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணி பயன்படுத்த இருப்பதாக தற்போது தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள அவரின் ஆட்டத்தை பார்க்கவே நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் அவரை விளையாட வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில் உலககோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள இஷான் கிஷனுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : திலக் வர்மாவிடம் இருக்கும் ஒரு பெரிய பிளஸ் இதுதான்.. அவர் ஒரு மிகப்பெரிய மேட்ச் வின்னர் – ரோஹித் சர்மா கருத்து
இப்படி ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்த போட்டியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டதால் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



