திலக் வர்மாவிடம் இருக்கும் ஒரு பெரிய பிளஸ் இதுதான்.. அவர் ஒரு மிகப்பெரிய மேட்ச் வின்னர் – ரோஹித் சர்மா கருத்து

Rohit and Tilak
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான பிராண்ட் அம்பாசிடராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் 2024 டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

திலக் வர்மா ஒரு பிக் மேட்ச் பிளேயர் : ரோஹித் சர்மா

இந்நிலையில் பிரபல ஆன்லைன் செயலி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் அசத்திய திலக் வர்மா குறித்து சில கருத்துக்களை கூறி அவரை பாராட்டியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : முதல் முறையாக திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் வந்தபோது அவரிடம் ஏதோ திறமை இருக்கிறது என்பதை நான் அறிந்தேன்.

- Advertisement -

அதன்பிறகு அவர் எங்களது அணியில் இருந்த போது அவர் காட்டிய ஆட்டிடியூட் மற்றும் கவனம் அனைத்துமே அவரிடம் இருக்கும் திறமையை வெளிக்காட்டுவதாக இருந்தது. ஒருமுறை அவர் என்னிடம் வந்து என்னை பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே அனுப்புங்கள். நான் நிச்சயம் என்னுடைய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என்று தெரிவித்தார்.

அதற்கு பிறகு தான் நான் அவரை டாப் ஆர்டரில் மும்பை அணிக்காக களமிறக்கினேன். உண்மையிலேயே திலக் வர்மா ஒரு மிகச் சிறப்பான பேட்ஸ்மேன். அதிலும் குறிப்பாக அணி எப்போது சிக்கலில் தவிக்கிறதோ அந்த அழுத்தமான வேளையில் அவர் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். அதுதான் அவரிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ். அணி சிக்கலை சந்திக்கும் போது அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தை எப்போதுமே விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் மோசமான பேட்டிங் பார்ம் குறித்த கேள்விக்கு தெளிவான பதிலளித்த – மோர்னே மோர்கல்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் சரி, இந்திய அணிக்காகவும் சரி அவர் ஒரு மிகப்பெரிய பிக் மேட்ச் பிளேயர். அவரிடம் இருந்து அழுத்தமான வேளைகளில் நல்ல இன்னிங்ஸ் வெளிவரும் என்றும் அவர் அணியில் இருந்தால் பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்திலும் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement