2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் வேளையில் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. ஏற்கனவே இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான பலமான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் தற்போது ஒரே ஒரு குறைவாக துவக்க வீரரான சஞ்சு சாம்சனின் மோசமான பேட்டிங் ஃபார்ம் பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன் பேட்டிங் பார்ம் குறித்து பேசிய : மோர்னே மோர்கல்
ஏனெனில் ஏற்கனவே சுப்மன் கில் துவக்க வீரராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மாவுடன் அசத்தி வந்த அவர் இந்த டி20 உலக கோப்பை தொடரிலும் அசத்துவார் என்பதனாலே அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரில் அவரது பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக முதல் மூன்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று முடிந்துள்ள வேளையில் அந்த மூன்று ஆட்டங்களிலுமே சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக இஷான் கிஷனை விளையாட வைக்கலாம் என்ற பேச்சும் இருந்து வருகிறது.
ஆனால் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பான வீரர். அவர் தனது பார்மை மீட்டெடுப்பார் என்று பலரும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சனின் மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கூறுகையில் :
சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரருக்கு நாம் ஆதரவளித்தால் நிச்சயம் அவர் தனது பார்மை மீட்டெடுத்து விடுவார். அவரைப் போன்ற ஒரு வீரருக்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினாலே பார்ம் மீண்டும் கிடைத்துவிடும். டி20 உலக கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் சிறப்பான ஆட்டத்தை சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். அவர் வலைப்பயிற்சியில் மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க : 2026 டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கப்போகும் இந்திய வீரர் யார்? – சுரேஷ் ரெய்னா கணிப்பு
பயிற்சியில் பந்துகளையும் நன்றாக அடித்து ஆடுகிறார். தற்போது அவருக்கு தேவை ஒரு நல்ல இன்னிங்ஸ். அதுமட்டும் கிடைத்தால் நிச்சயம் டி20 உலக கோப்பையில் அவர் அசத்துவார். அவரது திறமை மீது எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. நிச்சயம் அவர் பழைய பார்மிற்கு திரும்புவார் என மோர்னே மோர்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.



