
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை இன்று பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அப்படி வெளியான அறிவிப்பில் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது கேட்ச் பிடிக்கையில் ஏற்பட்ட காயத்தால் கடந்த சில மாதங்களாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை எல்லாம் முடிந்து மெல்ல மெல்ல பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்த அவர் தற்போது மீண்டும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளார்.
இருந்தாலும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவதில் ஒரு சிறிய சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் யாதெனில் : இந்திய அணி அறிவிக்கப்படும் போதே ஷ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதியை கருத்தில் கொண்டே இந்த தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
அவர் 50 ஓவர்கள் முழுவதும் பீல்டிங் செய்யும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம்பெற்று போட்டியில் விளையாடுவார். இல்லையென்றால் ஓய்வறையிலே இருக்க வேண்டிய அவசியமும் ஏற்படலாம். கடந்த சில நாட்களாக பேட்டிங் பயிற்சி செய்து வரும் அவர் வலைப்பயிற்சியின் போது எந்த ஒரு அசவுகரியத்தையும் சந்திக்காமல் முழுவதுமாக பேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அக்சர் படேல் இடம்பெறாததுக்கு காரணமே இதுதான் – விவரம் இதோ
அதேபோன்று பயிற்சிக்கு பிறகும் சரி, பயிற்சிக்கு முன்பும் சரி எந்த அசோகரித்தையும் அவர் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் பீல்டிங் போது ஒருநாள் முழுவதும் அவரால் களத்தில் இருக்க முடியுமா? என்பதே அவரது விடயத்தில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.