அவர் பிறப்பிலேயே கேப்டன், அடுத்த 10 வருடத்துக்கு ராஜாங்கம் நடத்துவார் – இளம் இந்திய வீரருக்கு கிடைத்த பாராட்டு

Iyer-1
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிரமான வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ipl

- Advertisement -

கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்:
இந்த சீசனின் முதல் போட்டியில் களமிறங்கும் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பதற்காக கடந்த 2 வாரங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர பயிற்சியை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து மும்பை வந்தடைந்துள்ள அந்த அணி தனது முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மறுபுறம் தனது முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்ளும் கொல்கத்தா அணி அதன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் தனது பயணத்தை தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாகவே அதிரடியாக விளையாடி வளர்ந்து வரும் இந்திய வீரராகக் கருதப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த சில மாதங்களுக்குள் 3 வகையான இந்திய அணியிலும் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக டி20, ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக ரன்களை விளாசும் திறமை பெற்றுள்ள அவர் இதற்கு முன் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு தனது கேப்டன்ஷிப் திறமையையும் நிரூபித்துள்ளார்.

csk vs dc

பிறப்பிலேயே கேப்டன்:
இதனால் சமீபத்தில் நடந்த ஏலத்தில் இவரை வாங்குவதற்கு பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா போன்ற நல்ல கேப்டன்கள் இல்லாத அணிகள் போட்டி போட்ட நிலையில் இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கி தங்களின் புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரேயஸ் ஐயர் பிறப்பிலேயே ஒரு அணியை வழிநடத்தும் தலைமைப் பண்புகளை கொண்டுள்ளார் என அந்த அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியது பின்வருமாறு. “ஷ்ரேயஸ் பிறப்பிலேயே உருவான ஒரு கேப்டன். அவர் தனது அணியின் வெற்றிக்காக களத்தில் நடந்து கொள்ளும் விதம் வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதை போன்றவை அவரின் தலைமைப் பண்புகளை காட்டுகிறது. மேலும் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள பட் கம்மின்ஸ் பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்துள்ளார். எனவே இந்த இருவரும் சேர்ந்து கொல்கத்தா அணியை முன்னின்று சிறப்பாக வழி நடத்துவார்கள். இதற்குமுன் டெல்லி அணிக்காக ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்ஷிப் செய்துள்ளார். அவரிடம் கிரிக்கெட் பற்றிய நுணுக்கங்களும் ஒரு போட்டியை எவ்வாறு விளையாட வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வையும் உள்ளதால் அவரால் தன்னிச்சையாக செயல்பட முடியும். ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் கொல்கத்தா அணி நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு சிறப்பானதாகும்” என கூறினார்.

Hussey

வருங்கால கேப்டன்:
டேவிட் ஹசி கூறுவது போல ஒரு சில வீரர்களுக்கு இயற்கையிலேயே தலைமைப் பண்புகள் இருப்பதை பார்த்துள்ளோம். எடுத்துக்காட்டாக இந்தியாவின் மகத்தான முன்னாள் கேப்டன் எம்எல் தோனியை “பார்ன் டு லீட்” அதாவது “கேப்டனாக பிறந்தவர்” என அவரை வளர்த்த சௌரவ் கங்குலி வரலாற்றில் பலமுறை பாராட்டியுள்ளார். அதுபோல தற்போது வளர்ந்து வரும் வீரராகக் கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் இயற்கையாகவே ஒரு அணியை வழிநடத்தும் பண்புகளை கொண்டுள்ளார் என டேவிட் ஹசி பாராட்டியுள்ளார்.

கடந்த 2008 முதல் ஒருமுறைகூட பைனலுக்கு தகுதி பெற முடியாமல் தள்ளாடி வந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த ஷ்ரேயஸ் அந்த வருடமே அந்த அணியை பிளே – ஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்றார். அதற்கு அடுத்த 2020 சீசனில் ஒருபடி மேலே சென்ற அவர் வரலாற்றிலேயே முதல்முறையாக டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தார்.

iyer

இருப்பினும் கூட அவரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்காமல் கழட்டிவிட்டு உள்ளது ஆச்சரியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட அவரை கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக கேப்டன்ஷிப் செய்ய அனுமதிக்க உள்ளதாக டேவிட் ஹசி கூறியுள்ளார். மேலும் தற்போது 27 வயது மட்டுமே நிரம்பிய உள்ள அவர் குறைந்தது அடுத்த 7 – 10 வருடங்களுக்கு விளையாடுவார் என்பதால் வரும் காலங்களில் ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய கிரிக்கெட்டில் ராஜாங்கம் நடத்துவார் எனவும் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.

Advertisement