- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித், சுப்மன் கில்லை தாண்டி ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கவிருக்கும் ஜாக்பாட் – விவரம் இதோ

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று அசத்தினார். கடந்த பல ஆண்டுகளாகவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை கூட எட்டாத அந்த அணியை இம்முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இருந்தாலும் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் :

ஆனால் இந்த தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக பேட்டிங்கில் 600 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தலான பார்மையும் அவர் வெளிக்காட்டி இருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதோடு கூடுதலாக அவர் டி20 போட்டிக்கும் திரும்ப வேண்டும் என்ற விவாதங்களும் இருந்து வருகின்றன. ஆனால் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது நிறைய மேட்ச் வின்னர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வேளையில் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை அவருக்கு மாபெரும் ஜாக்பாட் ஒன்று அடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் அடுத்த 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மா சரியான உடற்தகுதி மற்றும் பார்மில் இருந்தால் மட்டுமே அவரால் தொடர முடியும் என்று கூறப்படும் வேளையில் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான அடுத்த கேப்டன் தேடலில் நிர்வாகம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து சுப்மன் கில் தான் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் இருக்கார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒருநாள் கேப்டன் பதிவியை வழங்கலாம் என கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலியிடம் இருந்து கிடைத்த அந்த ஆலோசனைகள் நிச்சயம் இங்கிலாந்தில் உதவும் – சாய் சுதர்சன் பேட்டி

அவர் ஒருநாள் பேட்டிகளில் நல்ல பார்மில் இருப்பதால் அவரை கேப்டனாக தேர்வு செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -