விராட் கோலியிடம் இருந்து கிடைத்த அந்த ஆலோசனைகள் நிச்சயம் இங்கிலாந்தில் உதவும் – சாய் சுதர்சன் பேட்டி

Sai Sudharsan and Kohli
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் 15 போட்டிகளில் விளையாடி 759 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த ரன்களின் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது.

விராட் கோலியிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுள்ளேன் : சாய் சுதர்சன்

அதோடு ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் வெளியான இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் அழைக்கப்பட்டுள்ள அவருக்கு நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அதோடு இந்திய டெஸ்ட் அணியில் 3 ஆம் இடத்தில் விளையாட தகுதியான வீரர் என்ற ஆதரவும் அவருக்கு பெருகி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தேர்வாகியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாய் சுதர்சன் விராட் கோலியிடம் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டு வருவதாகவும் அது தன்னுடைய கரியரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் என்று சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டிக்கு பிறகு விராட் கோலியிடம் வாழ்த்து தெரிவித்தேன். இதற்கு முன்பாகவும் அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். நான் எப்போதெல்லாம் அவரிடம் பேசுகிறேனோ அப்போதெல்லாம் பேட்டிங் குறித்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்கிறேன்.

- Advertisement -

குறிப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது விராட் கோலியின் மனநிலை, கடினமான நேரங்களை அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளேன். அவரிடம் இருந்து வரும் பதில்களின் மூலம் நான் நல்ல தெளிவையும் பெற்றுள்ளேன். பேட்டிங்கில் அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தனது திறமை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என அனைத்துமே அவரை பெரிய வீரராக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த வீரேந்திர சேவாக் – லிஸ்ட் இதோ

அந்த வகையிலே அவரிடம் இருந்து கிடைக்கும் அறிவுரைகளை வைத்து என்னுடைய கரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன். மேலும் பேட்டிங் ரீதியான தொழில்நுட்ப விவாதங்களும் எங்களுக்குள் நடைபெற்றுள்ளது. நிச்சயம் அது எனக்கு இங்கிலாந்து மண்ணில் சாதிக்க உதவும் என்றும் சாய் சுதர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement