- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆவது இந்திய பவுலராக முதல் ஓவரில் மோசமான சாதனையை நிகழ்த்திய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று பெல்பாஸ்ட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

அர்ஷ்தீப் சிங் நிகழ்த்திய மோசமான சாதனை :

அயர்லாந்து அணி சார்பாக அதிகபட்ச ஹாரி டெக்டர் 53 ரன்களையும், காளிட்ஸ் 37 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் யாதவ் தான் வீசிய முதல் ஓவரில் மோசமான சாதனை ஒன்றினை மூன்றாவது இந்திய வீரராக நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது முதல் ஓவரில் அவர் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக முதல் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை வழங்கிய பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 2 வீரர்கள் அறிமுகம் – வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏமாற்றம்

அவர்கள் இருவருக்கு அடுத்து மூன்றாவது இந்திய பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரில் 2 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -