இந்த வருஷம் கோட்டை விட்டுட்டோம். அடுத்த வருஷம் நிச்சயம் இதை தூக்கி பிடிப்போம் – தோல்விக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர்

iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

- Advertisement -

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

இந்நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் : ரிக்கி பாண்டிங் எங்களுக்கு தேவையான அளவு சுதந்திரமும், சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கத்தையும் அளித்தார். அவர் எங்களுக்கு அளித்த உத்திவேகம் எங்களை சிறப்பாக செயல்பட வைத்தது. அவருடைய டீம் மீட்டிங் மற்றும் மோட்டிவேஷனல் ஸ்பீச் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. இந்த ஐபிஎல் அனைவரையும் வழக்கம்போல் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

நிச்சயம் இந்த லீக் விளையாடுவதற்கு கடினமான ஒன்று. இந்த தொடரில் தோல்வி அடைந்தாலும் எங்களது அணி வீரர்கள் குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே நாங்கள் விளையாடிய விதம் மற்றும் இறுதிப் போட்டி வரை வந்தது எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த தோல்வி எளிதாக ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை. இந்த ஐபிஎல் தொடர் எங்களுக்கு சிறப்பாகவே அமைந்தது.

நாங்கள் நிச்சயம் அடுத்த வருடம் இந்த ஐபிஎல் கோப்பையை தூக்கி பிடிப்போம். எங்களது அணி ரசிகர்களுக்கு நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எங்கள் மீது அவர்கள் காண்பித்த சப்போர்ட் மற்றும் அவர்கள் காண்பித்த அன்பிற்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவிப்பதாக ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement