டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 12 லட்சம் அபராதம் விதிப்பு காரணம் என்ன தெரியுமா ?

Iyer-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 வது லீக் போட்டி நேற்று டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

bairstow

- Advertisement -

துவக்க வீரர்களான வார்னர் 45 ரன்களும், பேர்ஸ்டோ 53 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கம் அளித்தனர். அதன்பிறகு மனிஷ் பாண்டே வழக்கம்போல் 3 ரன்களில் ஏமாற்ற இந்த போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட வில்லியம்சன் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ரன் குவிப்புக்கு காரணமாக திகழ்ந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் என்ற நல்ல ரன்களை குவித்தது.

அதன்பிறகு 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பாக தவான் 34 ரன்களும், ரிஷப் பண்ட் 28 ரன்களும் அடித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக ரசித்கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Rashid

இத்தொடரில் சன்ரைசர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோற்றிருந்த நிலையில் நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான வெற்றியே இந்த தொடரில் அவர்கள் பெற்ற முதல் வெற்றியாக சன் ரைசர்ஸ் அணி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த போட்டியில் 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

dc

ஏனெனில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீசும் போது அவர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயருக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அதிரடி காட்டி உள்ளது.

Advertisement