சென்னை அணியில் மாற்றம்…அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர் – யார் தெரியுமா ?

iyar1
- Advertisement -

இன்று இரவு நடக்கவிருக்கும் டெல்லி மற்றும் சென்னைக்கு எதிரான போட்டி சென்னை அணியின் புதிய சொந்த மன்னனா புனேவில் நடக்க விருக்கிறது. கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் மும்பை அணியிடம் மோசமான பந்து வீச்சால் மண்ணை கவ்விய சென்னை அணிக்கு பந்து வீச்சில் பலம் தேவை என்பதை டோனி தெரிவித்திருந்தார்.

deepak

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளராக இங்கிலாந்தை சேர்ந்த வேகா பந்து வீச்சாளர் டேவிட் வில்லே சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. கடந்த போட்டியின் போது காயமடைந்த சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சஹர் தசை நாரில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்னும் 2 வாரங்கள் விளையாட மாட்டார் என்று சென்னை அணியின் பயிற்சிலர் ஸ்டெபன் பிளம்மிங் அறிவித்திருந்தார்.

எனவே அவரின் இடத்தை பூர்த்தி செய்ய தற்போது டேவிட் வில்லே சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் உள்ள பந்து வீச்சாளர்கள் கடந்த மும்பை போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. மேலும் அணியில் இருக்கும் சூழல் பந்து வீச்சாளர்கள் தாஹிர் மற்றும் ஜடேஜா கூட சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதிரணியிடம் எடுக்கவில்லை. எனவே தற்போது சென்னை அணி வேகா பந்து வீச்சாளர்களையே நம்பியுள்ளது.

lungi

கடந்த 27 ஆம் தேதி நடந்த போட்டியில் டெல்லி அணி நீண்ட போட்டிகளுக்கு பிறகு கொல்கத்தா அணியை வீழ்த்தியது. மேலும் அந்த அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் பதவியேற்ற பிறகு அந்த அணி. இதன் மூலம் அந்த அணியின் நம்பிக்கை கூடி இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று மும்மரமாக உள்ளது.

மேலும் இதுவரை நடந்து முடிந்த ஐபில் தொடர்களில் இந்த இரு அணிகளும் 16 போட்டிகளில் மோதியுள்ளது,இதில் 11 முறை சென்னை அணியும் 6 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் இதுவரை சென்னை ஆடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில உள்ளது. மேலும் இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாள் முதல் இடத்தில இருக்கும் ஹைதரபாத்தை முந்தும் வாய்ப்பு இருக்கிறது.

Advertisement