உலகில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது :

ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய தனித்துவ சாதனை :

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக நான்காவது வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். குறிப்பாக 36 பந்துகளை சந்தித்த 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 59 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் மூலம் இதுவரை எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அது குறித்து விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் நான்காவது வரிசையில் களமிறங்கிய அவர் :

- Advertisement -

அரை சதத்தை அடித்ததன் மூலம் இதுவரை நான்காவது இடத்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இந்த 1000 ரன்களை 100-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சராசரியுடன் கடந்து நான்காவது இடத்தில் 1000 ரன்களை 50-க்கும் மேற்பட்ட சராசரியுடனும், 100-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : 2 ஆவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அணிக்குள் வந்தால் வெளியேறப்போகும் வீரர் யார்? – விவரம் இதோ

ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை நான்காவது வரிசையில் 36 இன்னிங்ஸ்களில் விளையாடி 1456 ரன்களை 52 ரன்கள் சராசரியுடன், 103 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் அடித்துள்ளார். இது போன்ற ஒரு சாதனையை வேறு எந்த வீரமும் செய்தது கிடையாது. அதேசமயம் ஐந்தாவது இடத்தில் இந்த சாதனையை ஏபிடி வில்லியர்ஸ் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement