- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பை அணியில் இடமில்லை என்றால் என்ன? ஷ்ரேயாஸ் ஐயரை தேடிவரும் கேப்டன் பதவி – விவரம் இதோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியானது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு இடம் கிடைக்காதது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு தேடி வரும் கேப்டன் பதவி :

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது அவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஏனெனில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் 17 போட்டியில் விளையாடிய அவர் 175 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 604 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதோடு ரஞ்சி டிராபி தொடரிலும் 480 ரன்களை 68 சராசரியுடன் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி உள்ளூர் தொடர், ஐபிஎல் போட்டிகள் என கோப்பைகளை குறிவைத்து கைப்பற்றி வந்த அவருக்கு வாய்ப்பு கிடைக்காததில் நியாயம் இல்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி துபாய் சென்றடைந்துள்ள வேளையில் அந்த அணியில் இடம் பெறாமல் போன ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் வெளியான தகவலின் படி : செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா ஏ அணியானது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய ஏ அணிக்கு தான் அனுபவ வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரில் அவருடன் இணைந்து நாராயணன் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரெய்னா இல்ல.. தோனி தலைமையில் தனது ஆல் டைம் கனவு இந்திய டி20 அணியை தேர்ந்தெடுத்த தினேஷ் கார்த்திக்

ஏற்கனவே இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வரும் வேளையில் ஷ்ரேயாஸ் ஐயரை தேடி இந்த கேப்டன் பதவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -