காயமடைந்த சுந்தருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் சேர்ப்பு.. நியூஸி டி20 தொடரில் 2 மாற்று வீரர்களை அறிவித்த பிசிசிஐ

Shreyas Iyer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. 2 போட்டிகள் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசி போட்டி ஜனவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அத்தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் காயத்தை சந்தித்தார்.

அதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாடாமல் வெளியேறிய அவருக்கு பதிலாக ஆயுஷ் படோனி சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரின் காயம் பெரிதாக இருப்பதால் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதனால் அடுத்து நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

- Advertisement -

நியூஸிலாந்து டி20 தொடரில்:

அவருக்கு பதிலாக இளம் சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஸ்னோய் நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. சமீப காலங்களில் இந்திய அணிக்காக கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய பிஸ்னோய்க்கு சீனியர்கள் இருந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போது சுந்தருக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அதே போல கடந்த வாரம் 2025/26 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாடிய போது திலக் வர்மா வயிற்றில் பிரச்சனையை சந்தித்தார். அதற்காக சிறிய அறுவைசிகிச்சை மேற்கொண்ட அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக முதல் 3 போட்டிகளில் விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

ஸ்ரேயாஸ், பிஸ்னோய் சேர்ப்பு:

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதே வேகத்தில் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய அவர் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். அத்துடன் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை அவர் கேப்டனாக இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க: சைக்கிள் வேகத்தில் ஆடிட்டு கோபம் வேற.. ஸ்மித்தால் வெறுப்பான பாபர் அசாம்.. ரசிகர்கள் விமர்சனம்

அதன் காரணமாக இந்திய 20 அணியில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெஞ்சில் அவரும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் ஏராளமான முன்னாள் வீரர்கள் ரசிகர்களும் தேர்வுக்குழுவை சரமாரியாக விமர்சித்தனர். ஆனால் தற்போது திலக் வர்மா காயத்தால் மீண்டும் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement