ரஹானே தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் 2 இளம்வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – யார் அந்த 2 வீரர்கள்?

Rahane

நடப்பு உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது வரும் 17ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கு அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நவம்பர் 25ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

INDvsNZ

அதில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள வேளையில் முதல் போட்டியில் கேப்டன் விராத் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே செயல்பட உள்ளார். அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி கேப்டனாக இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு முதன்முறையாக அறிமுகவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் 4-வது வீரராக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

iyer

இருப்பினும் உலககோப்பை இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியில் விளையாட முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று மற்றொரு வீரராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.பரத்துக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு. கோலிக்கு ஓய்வு – 16 வீரர்களை கொண்ட லிஸ்ட் இதோ

ஏற்கனவே ரிசர்வ் விக்கெட் கீப்பராக இந்திய அணியுடன் பல தொடர்களில் பயணித்து இருந்த கே.ஸ் பரத் தற்போது இந்திய அணிக்காக நேரடியாக அறிமுகமாகும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார். 16 வீரர்கள் கொண்ட இப்பட்டியலில் இவர் 2 ஆவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளதால் நிச்சயம் இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒரு போட்டியிலாவது அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.

Advertisement