நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு. கோலிக்கு ஓய்வு – 16 வீரர்களை கொண்ட லிஸ்ட் இதோ

IND

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நவம்பர் 17ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதியும் துவங்குகிறது.

indvsnz

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித்சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். 2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி கேப்டனாக அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட அணி இதோ :

1) ரஹானே (கேப்டன்), 2) புஜாரா (து.கேப்டன்), 3) கே.எல் ராகுல், 4) மாயங்க் அகர்வால், 5) கில், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) விரிதிமான் சஹா, 8) கே.எஸ் பரத், 9) ரவீந்திர ஜடேஜா, 10) அஷ்வின், 11) அக்சர் படேல், 12) ஜெயந்த் யாதவ், 13) இஷாந்த் சர்மா, 14) உமேஷ் யாதவ், 15) சிராஜ், 16) பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -
Advertisement